மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

தோல்விக் கணக்கு: கோபப்பட்ட எடப்பாடி

தோல்விக் கணக்கு: கோபப்பட்ட எடப்பாடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிலுவம் பாளையத்தில் வாக்களித்தார்.

அதன்பின் அன்று இரவு புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கினார். ஏப்ரல் 10-ஆம் தேதி காலை வரை அவர் சேலத்தில் தான் இருந்தார்.

இந்த நாட்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும் தற்போதைய அமைச்சர்கள் சந்தித்து தேர்தல் பற்றியும் வாக்குப்பதிவுக்கு பிறகான கருத்தாக்கங்கள் பற்றியும் விவாதித்தனர்.

இந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திற்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த கெங்கவல்லி, சேலம் வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் சேர்ந்த அதிமுக ஒன்றிய நகர செயலாளர்களை அழைத்திருந்தார்.

அன்று மதிய உணவிற்கு பிறகு அவர்களை சந்தித்த முதல்வர்...

" போன தேர்தலில் நான் சேலம் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் இந்த மாவட்டத்தை மட்டும் தான் பார்த்துக்கிட்டேன். ஆனா இந்த தேர்தல்ல இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர், முதலமைச்சர் வேட்பாளர்னு மூன்று முக்கியப் பொறுப்புகளோட தமிழ்நாடு ஃபுல்லா கவனிக்க வேண்டிய கடமை எனக்கு வந்துடுச்சு.

அதனால நான் சேலம் மாவட்டத்தை கவனிக்க மாட்டேன்னு நினைச்சிட்டீங்களா?

போன தேர்தலில் நம்ம மாவட்டத்துல இருக்கிற 11 தொகுதிகளில் ஒரு தொகுதியை தான் திமுக ஜெயிச்சது. நான் அமைச்சராக இருக்கும்போது அப்படினா.... இப்ப நான் முதலமைச்சராக இருக்குறப்ப ஒரு தொகுதி கூட திமுக ஜெயிக்க கூடாதுனு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கேன்.

ஆனால் தேர்தலுக்குப் பிறகு எனக்கு கிடைத்த தகவல்கள் படி கெங்க வல்லியும் சேலம் வடக்கு தொகுதியும் ரொம்ப கஷ்டமாக போய் விடுமோனு தோணுது.

இந்த இரண்டு தொகுதியிலயும் நம்ம நிர்வாகிகள் சரியா செயல்படலைனும் தேர்தல் செலவுக்கு கொடுக்கப்பட்ட பணம் இடையிலேயே தேங்கிடிச்சுன்னும் எனக்கு தகவல் வந்திருக்கு.

எம்ஜிஆர் காலத்து கட்சிக்காரரும் சீனியருமான செம்மலை அண்ணன் இந்த முறை போட்டி போடலை. ஆனா அதுக்காக அவரே வீட்டிலேயே முடங்கி ட்டாரா? இந்த வயசுலயும் அவரு கடுமையா தேர்தல் பணியாற்றி இருக்காரு.

அவரை விட நீங்கள் எல்லாம் உசந்து போய்விடலை.. ஒருமுறை சீட்டு கிடைக்கலைன்னா கட்சிக்காக உழைக்கக் கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா? இந்த இரண்டு தொகுதி தேர்தல் முடிவு வேற மாதிரி வந்துச்சுன்னா உங்க மேல கடுமையான நடவடிக்கை எடுப்பேன்" என்று சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை கடுமையாக கோபித்து அனுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

முதல்வரின் கோபம் பற்றி அந்த இரண்டு தொகுதிகளில் நாம் விசாரித்தோம்.

"சேலம் வடக்கு தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான திமுகவின் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்குத்தான் மீண்டும் வெற்றி வாய்ப்பு என்று முதல்வருக்கு தகவல் போயிருக்கிறது. காரணம் இந்த தொகுதிகளில் திமுக சுமார் ஒன்றரை லட்சம் வாக்காளர்களுக்கு பணத்தை செம்மையாக பட்டுவாடா செய்து விட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர் வெங்கடாசலம் ராஜேந்திரனுக்கு கடுமையான போட்டி தான் கொடுத்திருக்கிறார். மேலும் திமுக வேட்பாளருக்கு எதிராக வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள்.

கெங்கவல்லி தொகுதியில் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினரான மருதமுத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் அவர் ஆதரவாளர்கள் பெரிதாக வேலை செய்யவில்லை என்று முதல்வருக்கு தகவல்கள் போயுள்ளன. மேலும் இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி போட்டியிடுகிறார். அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏ மருதமுத்து ஐந்து வருடங்களாக தொகுதி பக்கமே அவ்வளவாக தலை காட்டவில்லை என்ற விமர்சனமும் இருக்க ரேகா பிரியதர்ஷினி கெங்கவல்லி தொகுதியை குறிவைத்து கடந்த 4 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். கெங்கவல்லி தொகுதியிலும் திமுக சார்பில் பட்டுவாடா சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. கெங்கவல்லி தொகுதிக்குடபட்ட

ஒன்றிய செயலாளர் ஒருவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் சிக்கிக் கொண்டதாக முதல்வருக்கு தகவல் செல்லவும் தான் கடுமையாக கோபம் கொண்டு இருக்கிறார்.

இந்த இரு தொகுதிகளில் மட்டுமல்ல.... சேலம் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் நிர்வாகிகளை அழைத்து முதல்வர் காரசாரமாகப் பேசி உள்ளார்" என்கிறார்கள்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 11 ஏப் 2021