மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

தடுப்பூசி பற்றாக்குறை: மீண்டும் ராகுல் அதிருப்தி!

தடுப்பூசி பற்றாக்குறை: மீண்டும் ராகுல் அதிருப்தி!

மத்திய அரசால் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவோ, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று 1,52,879 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,33,58,805 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது என கூறப்படுகிறது. மும்பையில் 70க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதை பார்த்து, தடுப்பூசி போட வந்தவர்கள் திரும்பி சென்றனர்.

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க, இன்று முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது.

”இந்திய அளவில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு சதவிகித மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். பிற நாடுகள் ஓரளவுக்கு தங்கள் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்தி விட்டன. நம் நாட்டில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை இருக்கும்போது இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனவே தடுப்பூசி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ட்விட்டரில் அதுகுறித்தான கருத்தை பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதில்,” போதுமான தடுப்பூசி இல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. நாட்டில் போதுமான தடுப்பூசி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிவாரண உதவி இல்லை, குறு,சிறு,நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பு இல்லை, நடுத்தரக் குடும்பங்களுக்கு மனநிறைவு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 11 ஏப் 2021