மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

ஸ்ரீவில்லிப்புத்தூர் வாக்கு எண்ணிக்கை: சாகு விளக்கம்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் வாக்கு எண்ணிக்கை: சாகு விளக்கம்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வழக்கம்போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் மாதவராவ் (63). அவருக்கு கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பெற்று வந்த சமயத்தில் அவருக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று(ஏப்ரல் 11) காலை 7.55 மணியளவில் எதிர்பாராத விதமாக சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அதனால், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் ஒரு வேளை வெற்றிபெற்றால், தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. மாறாக அவர் வெற்றி பெறவில்லை எனில் மாற்றம் எதுவும் இருக்காது என மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் வழக்கம்போல் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒருவேளை காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 11 ஏப் 2021