மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

மெரினாவில் மக்களுக்குத் தடை!

மெரினாவில் மக்களுக்குத் தடை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும், ஏற்கனவே அறிவித்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளையும் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று (ஏப்ரல் 10) வெளியிட்டிருந்த உத்தரவில், "சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது.

அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டில் சிறிது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரை அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.

புதிய திரைப்படங்களை அனுமதிக்கப்பட்ட காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சியை முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே திரையிட அனுமதி வழங்கப்படும். அனைத்து காட்சிகளிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்த 20 கொரோனா கட்டுப்பாடுகள் சனிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் அமலுக்கு வந்த நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் இன்று (ஏப்ரல் 11) முதல் அமலுக்கு வருகின்றன.

வருகிற 13ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் வழிபாட்டுத் தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் தளர்வு அளித்து, இரவு 10 மணி வரை வழிபாட்டுத் தலங்களை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

ஞாயிறு 11 ஏப் 2021