மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஐந்து மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதல் 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தபோதிலும், தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஒட்டுமொத்த நாடும், உலகமும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் அந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தற்போதைய சூழலில் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக, எந்த ஒரு போராட்டமும் தொடர்ந்து நடக்கிறது என்றால் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதில்லை. ஆனால் விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தாத போதிலும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது.

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு அமல்படுத்தாமல் நிறுத்திவைப்பது, புதிய சட்டங்கள் குறித்து ஆராயக் குழு அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள் எந்த காரணத்தையும் கூறாமல் இதை நிராகரித்து விட்டனர். விவசாயிகள் எப்போது உறுதியான திட்டத்துடன் வருகிறார்களோ அப்போது பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், தற்போதைய சூழலில் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 11 ஏப் 2021