மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

இரட்டை தலைமை கூடுதல் பலம்தான்: கடம்பூர் ராஜூ

இரட்டை தலைமை கூடுதல் பலம்தான்: கடம்பூர் ராஜூ

அதிமுகவில் இரட்டை தலைமைதான் தொடரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான போது, அதிமுக சார்பில் யார் முதல்வர் வேட்பாளர்கள் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்தது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என ஒரு வழியாகக் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

மே 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காகத் தமிழகமே காத்திருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவித்துவிட்டோம். இரண்டு பேரும் கையெழுத்திட்டுத்தான் வேட்பாளர்களை அறிவித்தல் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒற்றை தலைமை என்பதை காட்டிலும், இரண்டு தலைமை என்பது கூடுதல் பலம் தான். எங்களுக்கு இரட்டை தலைமை என்பது பழகிவிட்டது. இரட்டை தலைமைதான் தொடரும்.

அதிமுக இந்த தேர்தலில் 140 இடங்களில் வெற்றிபெறும், அதிமுக கூட்டணியையும் சேர்த்து மொத்தமாக 190 இடங்களில் வெற்றிபெறும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

சனி 10 ஏப் 2021