மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

தேர்தலுக்குப் பின் பன்னீரை சந்தித்த எடப்பாடி

தேர்தலுக்குப் பின் பன்னீரை சந்தித்த எடப்பாடி

தேர்தல் நடந்து முடிந்த பின் சேலத்தில் தனது வீட்டிலேயே இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 10) காலை 8.30 மணியளவில் சேலத்தில் இருந்து தேனிக்குப் புறப்பட்டார்,

கடந்த 7ஆம் தேதி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் இயற்கை எய்தினார். உடனடியாக அந்த துக்க நிகழ்வுக்கு செல்ல முடியாத காரணத்தால் இன்று காலை சேலத்தில் இருந்து தேனிக்குப் புறப்பட்டார் முதல்வர். வழக்கமான முதல்வர் பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி பெருமாள்சாமி தலைமையில் எப்போதும் போலவே எஸ்கார்டு வண்டிகளுடன் முதல்வர் இன்று காலை சேலத்தில் இருந்து புறப்பட்டார்.

திண்டுக்கல் பைபாஸ் வழியாக சுமார் மூன்று மணி நேரப் பயணத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருக்கும் ஓபிஎஸ்சின் மனைவி இல்லத்துக்கு சென்றார் முதல்வர். அவரோடு அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் சீனிவாசன் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.

அமைச்சர்கள் புடை சூழ துணை முதல்வரின் மாமியார் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் அங்கே மறைந்த வள்ளியம்மாளின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மைத்துனர், மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகள் பலரும் உத்தமபாளையத்துக்கு வந்துவிட்டனர்.

தேனி மாவட்ட கழக செயலாளர் கம்பம் அதிமுக வேட்பாளர் எஸ் பி எம். சையதுகான். அமைச்சர், இப்போதைய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி கே. ஜக்கையன், ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் வேட்பாளர் எம்.முருகன், பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, தேனி நகர செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், தேனி ஒன்றிய செயலாளர் ஆர் டி .கணேசன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் வரதராஜன் என அனைத்து ஒன்றிய, நகர நிர்வாகிகளும் உத்தமபாளையத்துக்கு வந்துவிட்டனர்.

அரைமணி நேரம் ஓபிஎஸின் மாமியார் வீட்டில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கேயே சில நிமிடங்கள் துணை முதல்வரோடு ஆலோசனை நடத்தினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பற்றி ஏற்கனவே இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டாலும், நேரில் சந்தித்தபோதும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து சில நிமிடங்கள் ஆலோசனை செய்தனர்.

பின் உத்தமபாளையத்தில் இருந்து புறப்பட்டு மதுரைக்குச் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் பயணத்திட்டத்தோடு புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 10 ஏப் 2021