மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

மூன்று வார ஊரடங்கு தேவை!

மூன்று வார ஊரடங்கு தேவை!

மகாராஷ்டிரா முழுவதும் கொரோனா பாதிப்பு ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதால், பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அனைத்து கட்சிகளுடன் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரே நாளில் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று 77,567 பேர் குணமாகி வீடு திரும்பினாலும், பல்வேறு மருத்துவமனைகளில் 10,46,631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலும், அதனால் ஏற்படுகிற உயிரிழப்பும் அதிகளவில் இருக்கின்றன. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 58,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 301 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அதனால் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிராவில் நேற்று இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஒட்டுமொத்த ஊடரங்கு கடைபிடிக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தும் இல்லாததால் மும்பை நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கு போடுவது போதாது. மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பித்தால் மட்டுமே பலனை காண முடியும், பரவலை கட்டுப்படுத்த முடியும் என மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அனைத்து கட்சிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது ஆலோசனைக்கு பிறகு தெரிய வரும்.

பெங்களூரு

கர்நாடாக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 7,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 46 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலாபுராகி, பிதர், தும்கூரு, உடுப்பி மற்றும் மணிப்பால் ஆகிய இடங்களில் இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 20 வரை அமலில் இருக்கும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இரவு நேரங்களில் செயல்படும் தொழிற்சாலை, நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படலாம். ஆனால், பணியாளர்கள் பத்து மணிக்கு முன்பாகவே நிறுவனத்துக்குள் சென்றுவிட வேண்டும். பெங்களூரு கிராமபுறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள தேவாலயங்களில் ஆராதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

சனி 10 ஏப் 2021