மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

அடுத்த 25 நாட்கள்- அலர்ட் சென்னை!

அடுத்த 25 நாட்கள்- அலர்ட் சென்னை!

வீடுகளுக்கு வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதுபோன்று சென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணியும் இன்று தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இன்று (ஏப்ரல் 10) சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அறிகுறிகள் ஏதும் இருந்தால், பரிசோதனைக்கு வரும் ஊழியர்களிடம் தயக்கமின்றி தெரியப்படுத்த வேண்டும், அச்சப்படவோ, வெட்கப்படவோ தேவையில்லை.

உடலில் சிறிய மாற்றம் ஏற்படும்போதே பரிசோதனை செய்து கொண்டால், 100% உயிரிழப்பு தவிர்க்கப்படும். அதன்படி, அறிகுறிகள் ஏதும் காணப்பட்டால், அருகில் உள்ள காய்ச்சல் முகாமிற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுங்கள். தற்போது 6 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவலின் தாக்கத்தை பொறுத்து பணியாளர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அலட்சியம் காட்டாமல் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வது மிக மிக அவசியம்.

சென்னையில் அடுத்த 25 நாட்கள் நெருக்கடியாக இருக்கும். மெரினா உள்ளிட்ட சுற்றுலா தளங்களிலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு பகுதிகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க அதிகரிக்க மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி 620 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 846ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாகவும், கோவையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 100ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 10 ஏப் 2021