மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு?

9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு  கட்டாய ஓய்வு?

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கட்டாய பணி ஓய்வு வழங்கத் தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உதவி பேராசிரியர் முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் குளறுபடி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்வுகளில் சரியான விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் அலைக்கழித்தல், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒரே தவறு மீண்டும் மீண்டும் நடந்திருக்கிறது என்று கூறி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளைக் கட்டாயப் பணி ஓய்வில் அனுப்பப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையம் தலைமை செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில், சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர், காகர்லா உஷா, ஜெகநாதன், ஸ்ரீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர் தவிர மற்ற 7 பேர் தற்போது பணியில் இருக்கின்றனர்.

இந்த பரிந்துரையின் பேரில் தலைமைச்செயலாளர் ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 10 ஏப் 2021