மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

தமிழகத்தில் முழு ஊரடங்கு வருமா?: முதல்வர்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு வருமா?: முதல்வர்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், முழு ஊரடங்கு வருமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஏப்ரல் 9) மாலை இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,15,386 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,72,415 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் 30,131 பேர் உள்ளனர். 12,840 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,02,58,000 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பரிசோதனை நிலையங்கள் 260, இதில் அரசின் சார்பில் 69 தனியார் 191.

தினசரி பரிசோதனை செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை 85,000. தமிழகத்தில் குணமடைந்தோர் சதவீதம் 95.31 ஆகவும், இறந்தவர்களின் சதவீதம் 1.40ஆகவும் உள்ளது.

தமிழகத்துக்கு வரப்பெற்ற மொத்த தடுப்பூசிகள் 54,85,720. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 34,87,036. தற்பொழுது கையிருப்பில் சுமார் 20,00,000 தடுப்பூசிகள் உள்ளன.

மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் சதவீதம் 4.21.

தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளைத் தவறாமல் அனைத்து பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசு அறிவித்த வழிமுறைகளை முழுமையாக மக்கள் பின்பற்றினால் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. நோய்த்தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, அதற்குப் பின்னர் அரசு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு வருமோ? வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 10 ஏப் 2021