மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறையா?: அமித் ஷா

கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறையா?: அமித் ஷா

நாட்டில் இன்றைய தேதியில் அனைவருக்கும் தேவைப்படுவது கொரோனா தடுப்பூசி தான். ஆனால் மத்திய அரசு, வயது தகுதி அடிப்படையில் தடுப்பூசியைப் போட்டு வருகிறது.

இதுவரை நாட்டில் 9 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறிவருகின்றன.

நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் உள்ளது. இந்நிலையில் மும்பை உள்ளிட்ட சில தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதோடு தடுப்பூசி போட வந்தார்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுபோன்று தங்கள் மாநிலத்திலும் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதியிருக்கிறார். கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு நாளில் தீர்ந்து விடும் என்பதால் 30 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சத்தீஸ்கர். ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியானது

இந்த சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தற்போதைய சூழலில் இந்திய அளவில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு சதவிகித மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். பிற நாடுகள் ஓரளவுக்கு தங்கள் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்தி விட்டன.

நாம் இதே வேகத்தில் தடுப்பூசியைச் செலுத்தினால் 75 சதவிகிதம் பேருக்குச் செலுத்தப் பல ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் பொருளாதாரத்திலும் மக்கள் தொகையிலும் அதிகளவிலான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

நம் நாட்டில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை இருக்கும்போது இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனவே தடுப்பூசி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். மற்ற தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவற்றை வேகமாக ஆய்வு செய்து அனுமதிக்க வேண்டும்.

தடுப்பூசி கொள்முதலுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவை மத்திய அரசு இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறு பல்வேறு இடங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்த நிலையில், இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு கொல்கத்தா சென்றுள்ள அமித்ஷா இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 9 ஏப் 2021