மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

இரவு நேர ஊரடங்கு வரலாம்: தமிழக அரசு!

இரவு நேர ஊரடங்கு வரலாம்: தமிழக அரசு!

தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லையென்றால், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி கொண்டிருப்பதால், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திருவிழாக்களுக்கு தடை, உணவகங்கள், கடைகளை இரவு 11 மணிக்குள் மூட வேண்டும், வழிப்பாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி, திரையரங்குகள், பூங்காக்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி, திருமணத்தில் 100 பேரும், இறப்பில் 50 பேரும் மட்டுமே பங்கேற்க வேண்டும். பேருந்துகளில் இருக்கைகளில் உட்கார்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் உள்ளிட்ட 20 கட்டுப்பாடுகள் நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ”கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லையென்றால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 16 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வெள்ளி 9 ஏப் 2021