மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

சென்னையில் என்.ஐ.ஏ. அலுவலகம்- புதிய எஸ்பி நியமனம்!

சென்னையில் என்.ஐ.ஏ. அலுவலகம்- புதிய எஸ்பி நியமனம்!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. வுக்கு பாஜகவின் ஆட்சிக் காலத்தில் கூடுதல் அதிகாரங்கள் அளித்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

பாஜக ஆட்சியில் என்.ஐ.ஏ. அமைப்பு அரசியல் உள் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில், சென்னையில் என்.ஐ.ஏ.யின் கிளை அலுவலகத்தைத் திறக்க கடந்த வருடமே மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

இப்போது அதன்படி சென்னையில் புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ.யின் தமிழக கிளை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் எஸ்.பி.யாக தமிழகத்தைச் சேர்ந்தவரும் அசாம் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஸ்ரீஜித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர்.

“என்.ஐ.ஏ.வின் கிளை அலுவலகம் சென்னையில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னரே, என்ஐஏ சென்னை இங்கு வழக்குகளை பதிவு செய்யத் தொடங்கும். அதுவரை டெல்லியில் வழக்குகள் பதிவு செய்யப்படும், ஆனால் சென்னை குழுவினரால் விசாரிக்கப்படும்.

நக்சல் ஆர்வலர் ஜே. விவேக் மீது அவரது பேஸ்புக் பதிவுக்காக டெல்லி என்ஐஏவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை கிளை அலுவலகத்தால் கையாளப்படுகிறது

புரசைவாக்கம் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டவுடன், அது ஒரு காவல் நிலையத்தின் முழு வழக்கு அதிகாரங்களுடன் செயல்படத் தொடங்கும்” என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தில்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்ட அன்சாருல்லா அமைப்புக்கு தமிழகத்தில் நிதி வசூல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு, கன்னியாகுமரியில் காவல்துறை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு, கும்பகோணம் ராமலிங்கம் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு போன்ற வழக்குகளை தமிழகத்தில் என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. மேலும் ஐஎஸ் ஐஎஸ் தொடர்பான வழக்குகளையும் விசாரித்து வருகிறது.

மாநிலத்தில் புதிய ஆட்சி அமைய இருக்கும் நிலையில் சென்னையில் என்.ஐ.ஏ.வின் அலுவலகம் தொடங்கப்பட்டு அதற்கு புதிய எஸ்.பி. நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

-வேந்தன்

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வெள்ளி 9 ஏப் 2021