மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

ஜெயலலிதா நினைவிடம்  திறப்பு!

ஜெயலலிதா நினைவிடம்  திறப்பு!

ஜெயலலிதா நினைவிடம் பொது மக்கள் பார்வைக்காக இன்று (ஏப்ரல் 9) மீண்டும் திறக்கப்பட்டது.

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ரூ.79.75 கோடி மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டுக் கடந்த ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட்டது.

அங்கு, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், சிறுகதைகள், படங்கள் ஆகியவை அடங்கிய அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது. நாட்டிலேயே அரசியல் தலைவர் ஒருவருக்கான நினைவிடத்தில் டிஜிட்டல் முறையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நினைவிடம் திறக்கப்பட்டு சில நாட்களிலேயே மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், மக்களின் பார்வைக்கு திறக்கப்படாமல் இருந்தது.   தற்போது இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் பொதுமக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.  அதே சமயத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது என்பதால்   நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

வெள்ளி 9 ஏப் 2021