மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

சென்னை: பெண்களின் வாக்குப்பதிவு குறைவு!

சென்னை: பெண்களின் வாக்குப்பதிவு குறைவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னைக்குட்பட்ட 16 தொகுதிகளில் ஆண்களே அதிகளவு வாக்குகளைப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் சென்னையில் பெண்களை விட ஆண்களின் வாக்குகள் தான் அதிகளவு பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், ஆண்கள் 60.83 சதவீத அளவிற்கு வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்கள் 57.44சதவீத அளவிற்கே வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகச் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 72.34சதவீத ஆண் வாக்காளர்களும், 69.76சதவீத அளவிற்குப் பெண் வாக்காளர்களும் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். வேளச்சேரி தொகுதியில் குறைந்த அளவாக 57.06சதவீத ஆண்களே வாக்கினைப் பதிவு செய்துள்ளனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 62.17சதவீத ஆண்கள் வாக்களித்துள்ள நிலையில், 54.8சதவீத பெண்களே தங்கள் வாக்கினைப் பதிவு செய்திருக்கின்றனர்.

மொத்தமுள்ள 16 தொகுதிகளில் இந்த தேர்தலின் போது, 12.13 லட்சம் ஆண்கள் மற்றும் 11.84 லட்சம் பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். எனினும் சென்னையில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் உள்ளனர். 19.94 லட்சம் ஆண்கள் மற்றும் 20.61 லட்சம் பெண் வாக்காளர்கள் தேர்தல் பட்டியலில் உள்ளனர்.

சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் ஆண்கள், பெண்கள் வாக்கு வித்தியாசம் சுமார் 3 சதவீத அளவிற்கே இருப்பதாகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 7 சதவீத அளவுக்கு இருப்பதாகவும் தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 9 ஏப் 2021