மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

கமல் வழக்கில் சிபிஐ!

கமல் வழக்கில் சிபிஐ!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் இறுதி நாளன்று 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது இன்றளவும் நீங்கா வடுவாக உள்ளது.

அப்போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியது தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கமல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், சட்டத்தை மீறும் வகையிலோ, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலோ எவ்விதமான செயல்களிலும் நான் ஈடுபடவில்லை. ஆகவே தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை நேற்று (ஏப்ரல் 8) நீதிபதி இளங்கோ விசாரித்தார். அப்போது அரசு தரப்பில், , ஸ்டெர்லைட் போராட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், சிபிஐயை எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் சிபிஐயை எதிர் மனுதாரராகச் சேர்த்து, சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 9 ஏப் 2021