மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

லாக்டவுன்: தமிழக அரசின் நிலை!

லாக்டவுன்:  தமிழக அரசின் நிலை!

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமெடுத்து பரவி வருகிற நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.

மகாராஷ்டிரா,பஞ்சாப், சத்தீஸ்கர் , தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த பாதிப்பில் 81% பேர் இந்த மாநிலங்களில் உள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிரா, டெல்லி,பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுடன் ஓப்பிடும்போது, தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது என்பது தமிழக அரசின் கண்ணோட்டம். இது ஒருபுறம் இருக்க. மற்றொரு பக்கம், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், தமிழகத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படையும் எனவும் தமிழக அரசு கருதுகிறது. ஒருவேளை மத்திய அரசு ஊரடங்கு நடவடிக்கையை கையில் எடுத்தால், சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

மக்களின் நலனையும் பார்க்க வேண்டும். அதேசமயம் பொருளாதாரத்தையும் நலிவு நிலைக்கு செல்ல விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதால் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 8 ஏப் 2021