மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ஊரடங்கில் ரமலானுக்கு தளர்வு: தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை!

ஊரடங்கில் ரமலானுக்கு தளர்வு: தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதையடுத்து தமிழக அரசு இன்று (ஏப்ரல் 8) வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளில் முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் மாத தொழுகை பாதிக்கப்படுவதாக தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (ஏப்ரல் 8) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் தமிழக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு கோரிக்கை மனு அளித்தார்.

அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில்,

“கொரோனா 2 வது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மதவழிபாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 14 முதல் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது. இம்மாதத்தில் அதிகமான அளவு இரவுநேர வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இஸ்லாமியர்கள் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆகவே, இதனை கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் இரவு 8 மணி முதலான ஊரடங்கு அறிவிப்பை இரவு 10 மணிக்கு என மாற்றினால் அது இஸ்லாமியர்களின் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே, இரவுநேர ஊரடங்கை இரவு 8 மணியிலிருந்து, இரவு 10 மணிக்கு மாற்றி அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 8 ஏப் 2021