மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

கேரள முதல்வருக்கு கொரோனா!

கேரள முதல்வருக்கு கொரோனா!

நாடு முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் வேகமெடுத்துள்ளது. சமீபத்தில், தமிழகம், புதுவை, கேரளம், அசாம் ஆகிய சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் இன்னும் 5 கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களத்தில் வேலைபார்த்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வரும் நிலையில், கேரள முதலமைச்சருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 75.

அவரின் மகள் வீணா விஜயனுக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனால் அவர் கவச உடையுடன் சென்று வாக்களித்தார். அவரின் கணவரும் பேப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடது முன்னணி வேட்பாளருமான முகமது ரியாசுக்கு மறுநாள் தொற்று உறுதியானது. அவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று பினராயி விஜயனுக்கும் தொற்று உறுதியானது. சொந்த கிராமமான பினராயியில் தங்கியிருந்த அவரும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். இப்போதைக்கு அவருக்கு சொல்லும்படியாக உடல்நல பாதிப்பு எதுவும் இல்லை என்று முதலமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 3ஆம் தேதி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

வியாழன் 8 ஏப் 2021