மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

அனுமதியின்றி எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலை: நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியின்றி  எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலை: நீதிமன்றம் உத்தரவு!

மண்ணச்சநல்லூர் பகுதியில் அனுமதியில்லாமல் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை அமைக்கத் தடை கோரிய வழக்கில் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் தாலுகாவை சேர்ந்த ராமச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள மணியங்குறிச்சி, பல கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மணியங்குறிச்சியில், திருச்சி- பெரம்பலூரை இணைக்கும் 13 அடி சாலையில் அரசிடம் அனுமதி பெறாமல் எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிலைகள் அமைக்கப்படும் பகுதி அரசின் பொது இடமாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் சிலை அமைப்பதனால் விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மணியங்குறிச்சி திருச்சி பெரம்பலூரில் இணைப்பு சாலையில் சிலைகள் அமைக்க தடை விதித்துஉத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், எம்ஜிஆர் ஜெயலலிதா சிலை அமைக்க அரசு அனுமதி வழங்கவில்லை. சாலைகள், நடைபாதைகளில் அனுமதி பெறாமல் சிலை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு 2017இல் அரசாணை பிறப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் , சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் மனுதாரரின் கோரிக்கையில் பொதுநலன் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள் அவரது மனு மீது திருச்சி மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அரசாணையின்படி 6 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 8 ஏப் 2021