மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

அமைச்சர்கள் தொகுதியில் அதிக வாக்குகள்!

அமைச்சர்கள் தொகுதியில் அதிக வாக்குகள்!

கடந்த 2016 சட்டசபை தேர்தலை போல், இந்த தேர்தலிலும் பல அமைச்சர்கள் தொகுதிகளில் அதிக சதவீதத்தில் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சரோஜா, வீரமணி, ஓ.எஸ்.மணியன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொகுதிகளில் 80 சதவீதம் மற்றும் அதற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடியில் 85.6 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் போட்டியிட்ட பாலக்கோடு தொகுதியில் - 87.33 சதவீதமும்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிட்ட கோபி செட்டிபாளையம் தொகுதியில் 82.5 சதவீதமும்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டவிராலிமலை தொகுதியில் 85.4 சதவீதமும்,

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் போட்டியிட்ட நன்னிலம் தொகுதியில் 82 சதவீதமும்,

அமைச்சர் சரோஜா போட்டியிட்ட ராசிபுரம் தொகுதியில் 82.1 சதவீதமும்,

அமைச்சர் கருப்பணன் போட்டியிட்ட பவானி தொகுதியில் 83.7 சதவீதமும்

அமைச்சர் வீரமணி போட்டியிட்ட ஜோலார்ப்பேட்டையில் 80.9சதவீதமும்,

போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட கரூரில் 83.5 சதவீதமும்,அமைச்சர் ஓஎஸ் மணியன் போட்டியிட்ட வேதாரண்யம் தொகுதியில் 80.6 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளது.

இதற்கு தொகுதியில் தங்கள் மீதோ அல்லது அரசு மீதான அதிருப்தியோ வாக்காளர்களுக்கு இல்லை. வாக்காளர்களை சந்தித்து பேசி ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வர நிர்வாகிகளை நியமித்தது, சாதி மத பிரச்சினை இல்லாதது ஓட்டு அதிகரிக்க காரணம் எனக் கூறுகின்றனர் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள்.

வாக்குபதிவுக்கு முந்தைய கருத்துகணிப்பு திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும் வாக்களித்தபின் வாக்காளர் மனநிலையை யாராலும் முந்தைய தேர்தல் போல் எளிதில் யூகிக்க முடியவில்லை என்றே கருத்துகணிப்பு நடத்தும் ஏஜன்சிகள் தெரிவிக்கின்றன.

-சக்தி பரமசிவன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 8 ஏப் 2021