மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

அமமுக பிரமுகர் கைது: போடியில் சாலை மறியல்!

அமமுக பிரமுகர் கைது: போடியில் சாலை மறியல்!

தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் கார் மீது கல்வீச்சு சம்பவத்தில் அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணிநேரம் பரபரப்பு நிலவியது.

போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியைப் பார்வையிட வந்த தேனி மக்களவை உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத்தின் கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் கார் சேதமடைந்தது.

இதுகுறித்து கார் ஓட்டுநர் பாண்டியன்(40) கொடுத்த புகாரில் 17-க்கும் மேற்பட்டவர்கள் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதில், அமமுகவைச் சேர்ந்த மாயி (58) என்பவரை போலீஸார் இன்று காலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி வழியாக பேருந்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேல் மணிகண்டன் மற்றும் போலீஸார் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அரை மணி நேர சாலை மறியல் கைவிடப்பட்டது.

-சக்தி பரமசிவன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 8 ஏப் 2021