மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ஏப்ரல் 10ல் இருந்து மீண்டும் கட்டுப்பாடுகள்!

ஏப்ரல் 10ல் இருந்து மீண்டும் கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இதுகுறித்து இன்று(ஏப்ரல் 8) தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அதுபோன்று கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் செயல்பட தடை.

தமிழகம் முழுவதும் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி.

திருமண விழாக்களில் 100 பேரும், இறுதி சடங்கில் 50 பேரும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்

தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே மக்களுக்கு அனுமதி.

வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி

மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி. மக்கள் பேருந்துகளில் நின்றவாறு பயணிக்கக் கூடாது.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவித தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தொடரும்.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள் , அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் 50% மக்களுக்கு மட்டுமே அனுமதி.

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ- பாஸ் கட்டாயம்.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

கொரோனா பரவல் நாடுமுழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். அதனடிப்படையில் சமீபத்தில் தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதை ஒட்டி கடந்த மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடந்த அரசியல் கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகிக் கொண்டிருந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 8 ஏப் 2021