மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ஒன்றிணைவோம் வா: மீண்டும் ஸ்டாலின் அழைப்பு!

ஒன்றிணைவோம் வா: மீண்டும் ஸ்டாலின் அழைப்பு!

மக்கள் நலன் காக்க பணியாற்றுமாறு 'ஒன்றிணைவோம் வா' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தில் தமிழக மக்கள்  தவித்துக்கொண்டிருந்த வேளையில், திமுக  ‘ஒன்றிணைவோம் வா’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது.  அன்றாட தினக்கூலிகள், அமைப்புசாராப் பணியாளர்கள், ஏழைகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு, மேலும், தேவைப்படும் மக்களுக்கு உணவும் ,மருந்துப் பொருளும் கொடுத்து உதவும் வகையில் 2020 ஏப்ரல் 20ஆம் தேதி இந்தத் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தியது.

அதையடுத்து தேர்தல் தொடர்பான பணிகளில்  தீவிரமாக இறங்கியது திமுக. தற்போது  தேர்தல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஒன்றிணைவோம் வாருங்கள் என  கட்சியினருக்கு அழைப்பு  விடுத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “

தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் திமுக. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு - மருத்துவ உதவி - அத்தியாவசியத் தேவைகளை திமுக நிறைவேற்றியது. கழக உடன்பிறப்புகளான அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதில் பங்கேற்றுத் தொண்டாற்றினர்.  

இந்த கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க.வின் சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திடுங்கள்.  கொரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள்.  

தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட 'ஒன்றிணைவோம் வாருங்கள்' உடன்பிறப்புகளே”  என்று அழைப்பு விடுத்துள்ளார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 8 ஏப் 2021