மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

குஷ்புவுக்காக அமித்ஷா காட்டிய அக்கறை!

குஷ்புவுக்காக அமித்ஷா காட்டிய அக்கறை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் நிறைவுபெற்று, அடுத்து முடிவுக்காகத் தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலில் மக்கள் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று ஆயிரம் விளக்கு தொகுதி. அதுபோன்று, அந்த தொகுதியில் போட்டியிடும் குஷ்புவும் அதிகளவு மக்களால் பேசப்பட்ட வேட்பாளர்.

திமுக, காங்கிரஸ் என அடுத்தடுத்து கட்சி மாறி அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு, இந்த தேர்தலுக்காக முதலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் முகாமிட்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பணிகளைச் செய்து வந்தார். இதனால் அந்த தொகுதியில் போட்டியிட அவருக்குத் தலைமை வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் குஷ்பு அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில், குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்த குஷ்பு, திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலனை எதிர்த்துப் போட்டியிடுவது கண்டிப்பாகச் சவாலானதாக இருக்கும். ஆனால், சாவலைச் சந்தித்தால் தானே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து தோல்வி என்பதே என் அகராதியில் இல்லை என்று கூறி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கடந்த காலங்களில் அதாவது, 1989, 1996, 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்துதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.க.செல்வம் வெற்றி பெற்றார்.

இதனால் ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டையாகப் பார்க்கப்பட்டது, இதனால் இந்த தொகுதி மீதான மக்களின் கவனம் அதிகரித்தது. கடும் போட்டி நிலவக் கூடிய தொகுதிகளில் ஒன்றானது.

இந்நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா, எப்படியாவது ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டியிருக்கிறார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியும், குஷ்பு வெற்றி பெறுவதற்கு என்ன தேவை, என்னவெல்லாம் செய்யலாம் என்று இங்கேயே தங்கி கட்சியினரிடம் பேசி வந்திருக்கிறார்.

இந்நிலையில் தான், குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் 500 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

குஷ்புவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரே ஆர்வம் காட்டியதால், அந்த தொகுதியில் தாராளமாய் செலவிடப்பட்டிருக்கிறது. திமுக சார்பில் ரூ. 350 கொடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பாஜக அதிமுக கூட்டணி சார்பில், ஓட்டுக்கு 500 கொடுத்தது மட்டுமின்றி பூத் செலவினங்களும் தாராளமாய் செலவிடப்பட்டிருக்கிறது.

இதனால் அந்த தொகுதியில் கடும் போட்டி உள்ளது. அதேசமயத்தில் திமுக , பாஜக என இரண்டு தரப்புமே முடிவை எதிர்பார்த்து நம்பிக்கையாக இருக்கிறது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 8 ஏப் 2021