மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

துரைமுருகனுக்கு கொரோனாவா?

துரைமுருகனுக்கு கொரோனாவா?

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா எனத் தகவல் வெளியான நிலையில், அது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வேகமாகப் பரவி வரும் இந்த சூழலில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனால் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திமுக எம்,பி.கனிமொழியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தார்.

இந்நிலையில், திமுகவின் பொதுச் செயலாளரும், காட்பாடி தொகுதியில் 10ஆவது முறையாகப் போட்டியிடும் திமுக வேட்பாளருமான துரைமுருகனுக்கும் (82) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

நேற்று (ஏப்ரல் 07) அவருக்குக் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில், அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் வீட்டு தனிமையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது,

இந்நிலையில், அவருக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனையின் முடிவில் ரிசல்ட் வந்ததாக, துரைமுருகன் தரப்பிலும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வியாழன் 8 ஏப் 2021