மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்ட மோடி

இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்ட மோடி

பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இன்று (ஏப்ரல் 8 ) செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இரவு நேர ஊரடங்கு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது என மீண்டும் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அதே சமயத்தில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை இன்று போட்டுக்கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியை மோடி செலுத்திக்கொண்டார்.

பிரதமருக்குப் புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா, பஞ்சாபை சேர்ந்த செவிலியர் நிஷா ஷர்மா ஆகியோர் தடுப்பூசி செலுத்தினர்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். வைரசை எதிர்கொள்வதில் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் ஒரு முக்கிய வழி. எனவே, உங்களுக்குத் தடுப்பூசி பெறுவதற்கான தகுதி இருந்தால் உடனே போட்டுக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, மார்ச் 1ஆம் தேதி அவர் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

தடுப்பூசி போடும் விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “தேவையுள்ளவர்கள், விருப்பமுள்ளவர்கள் எனப் பேசுவது முட்டாள்தனமானது. ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்வைப் பெறத் தகுதியுள்ளவர்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

வியாழன் 8 ஏப் 2021