மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

முதல்வர் வேட்பாளர்கள் தொகுதி நிலவரம்!

முதல்வர் வேட்பாளர்கள் தொகுதி நிலவரம்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88,937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று, கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் வாக்களித்துச் சென்றனர்.

இதில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளில் 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.

இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவிகிதம் குறைவாகும். 2016இல் 74.81 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக, பாலக்கோடு தொகுதியில் 87.33, குளித்தலையில் 86.15, எடப்பாடி தொகுதியில் 85.6, வீரபாண்டி தொகுதியில் 85.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52, தி.நகர் தொகுதியில் 55.92 வேளச்சேரி தொகுதியில் 55.95, மயிலாப்பூர் தொகுதியில் 56.59, அண்ணாநகர் தொகுதியில் 57.02 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நிலவியது. ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் 85.6, திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52, அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனின் கோவில்பட்டி தொகுதியில் 67.43, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கில் 60.72 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதன்படி, கட்சித் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், எடப்பாடியில் வாக்கு சதவிகிதம் அதிகமாகவும், கொளத்தூரில் குறைவாகவும் உள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 8 ஏப் 2021