மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

பாஜக தேர்தலில் வெற்றிபெறும் இயந்திரம் அல்ல: மோடி

பாஜக தேர்தலில் வெற்றிபெறும் இயந்திரம் அல்ல: மோடி

டெல்லியில் பாஜகவின் 41ஆவது துவக்க தின விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "பாஜக வெற்றி பெற்றால், தேர்தலில் வெற்றி அடையச் செய்யும் இயந்திரம் என்று கூறுவார்கள். மற்றவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்குப் பாராட்ட மனமிருக்காது. நம்மை தேர்தலில் வெல்லும் இயந்திரம் என்று சொல்பவர்கள், இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியையும், வாக்காளர்களின் அறிவையும், நம்பிக்கையையும் புரிந்துகொள்ள முடியாது. பாஜக தேர்தலில் வெற்றிபெறும் இயந்திரம் அல்ல, ஆனால், அது தொடர்ச்சியாக, இடைவிடாமல் மக்களின் மனங்களை வெல்வதற்கான பிரச்சாரத்தில் உள்ளது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்கு உண்மையாக சேவை செய்கிறோம். மக்களுடன் இணைந்துள்ளோம். எங்கள் கட்சி வென்றது என நாங்கள் பெருமைப்படுவதில்லை. இந்நாட்டு மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்தார்கள் என பெருமைக் கொள்கிறோம்.

கேரளா, மேற்கு வங்கத்தில் நமது கட்சியினர் மிரட்டப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள் அவர்களது குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் அவர்கள் நாட்டுக்காக வாழவும், இறக்கவும் உறுதியாக இருக்கிறார்கள். இது பாஜக தொண்டர்களின் தனித்துவம். மற்றொரு புறம் குடும்பம் மற்றும் வாரிசு சார்ந்த அரசியலுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

பிராந்திய வளர்ச்சி பற்றி பேசிய கட்சிகள் இறுதியில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கட்சிகளாக மாறியுள்ளன. இந்தக் கட்சிகள் போலி மதச்சார்பின்மை முகமூடியை அணிந்திருந்தன. அது இப்போது அகற்றப்பட்டு வருகிறது.

சிஏஏ, வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் போன்றவற்றுக்கு எதிராக அரசியல் இருப்பதையும் ஒரு பெரிய சதி இருப்பதையும் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை உருவாக்கும் முயற்சி உள்ளது. அதனாலேயே அனைத்து வதந்திகளும் பரப்பப்படுகின்றன. கற்பனை அச்சங்கள் உருவாக்கப்படுகின்றன.

சில சமயம் அரசியலமைப்பு மாற்றப்படும் என்கிறார்கள். சில நேரங்களில் குடியுரிமையை பிடுங்கிவிடுவார்கள் என்கின்றனர். இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவார்கள், விவசாயிகளின் நிலத்தை எடுத்துக்கொள்வார்கள் என்றெல்லாம் கூறுகின்றனர். இதுதொடர்பாக முழுமையான தகவல்களுடன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

-சக்தி பரமசிவன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 7 ஏப் 2021