மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

வீடு திரும்பினார் கனிமொழி

வீடு திரும்பினார் கனிமொழி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திமுக எம்.பி. கனிமொழி சிகிச்சை முடிந்து இன்று (ஏப்ரல் 7) வீடு திரும்பினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும், எம்.பி.யும்., திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட பல்வேறு வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

அந்த வகையில் கனிமொழிக்கும் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இறுதியாக அவர் பாளையங்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய அவர், கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இதில் பாதிப்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வாக்குப்பதிவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் .

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் என்னால் ஓட்டளிக்க முடிந்தது. நமது அடுத்த அரசைத் தேர்வு செய்ய உடல்நிலை பாதிப்பு ஒரு தடை அல்ல என்பதை உறுதி செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி" கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். அவரை வீட்டு வாசலில் மகளிரணியினர் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். வீடு திரும்பிய அவருக்கு எந்த பணியிலும் ஈடுபடாமல் 5 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 7 ஏப் 2021