மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் உடைப்பு!

வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் உடைப்பு!

தமிழகத்தில் சில இடங்களில் விவிபேட் இயந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து, முகவர்களும், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நேற்று(ஏப்ரல் 6) சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து,தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளிலும், அதற்கு வெளியேயும் சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் மே 2ஆம் தேதி அனைத்து மையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இந்நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலை உடைத்ததாக புகார்கள் வந்துள்ளன.

மயிலாடுதுறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு முடிந்து சீல் வைக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்டபிறகு இயந்திரத்தின் சீலை அகற்றியுள்ளனர். இதை எதிர்த்து முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோன்று, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு வாக்குச்சாவடி மையத்தில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீலை முகவர்கள் சென்ற பின் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து முகவர்களும், மக்களும் தேர்தல் அலுவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி திருமுல்லைவாயிலும் இதுகுறித்து புகார் வந்தது.

இரண்டு இடங்களிலும், இதுகுறித்து விளக்கமளித்த தேர்தல் அலுவலர்கள், வாக்கு இயந்திரத்தில் பேட்டரியை எடுக்காமல் சீல் வைத்ததால், சீலை உடைத்து பேட்டரியை எடுத்ததாக கூறியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த பணியாளர்கள் மூன்று பேர் வேளச்சேரி பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைபார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர்,சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் அவர்களிடம், அந்த வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டதா, இல்லையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இயந்திரங்கள் சென்னை, வேளச்சேரி தொகுதிக்கு உள்பட்ட 11ஆவது மண்டலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்தது.

வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 7 ஏப் 2021