மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிப்பாரா உதயநிதி?

தேர்தல் ஆணையத்தில் விளக்கமளிப்பாரா உதயநிதி?

தேர்தல் பிரசாரத்தின்போது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுபற்றி ஏப்ரல் 7ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என உதயநிதிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் பாஜக தலைவர்கள் குழு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதுபோன்று, வாக்குப்பதிவு தினமான நேற்று (ஏப்ரல் 6) மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட எஸ்ஐஇடி மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்தச் சென்றபோது திமுக கொடியுடன் கூடிய சூரியனை தன்னுடைய சட்டையில் பதிந்து வந்ததாக உதயநிதி மீது, அதிமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான பாபு முருகவேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் அளித்துள்ளார்.

-சக்தி பரமசிவன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

புதன் 7 ஏப் 2021