மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு!

அமைச்சர் வேலுமணி மீது வழக்குப்பதிவு!

தேர்தல் விதிகளை மீறியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதியும் போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

கார்த்திகேய சிவசேனாதிபதியின் காரைத் தாக்கி அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாகப் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே குனியமுத்தூர் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்ததாக தொண்டாமுத்தூர் தொகுதி மண்டல அலுவலர் ராஜா முகமது போலீசில் புகார் அளித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கட்சி கொடியுடன் காரில் வந்ததாகவும், அப்போது அவர் அதிமுக கட்சி துண்டு அணிந்து வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அமைச்சர் வேலுமணி மீது குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது, உதயசூரியன் சின்னத்தை தன்னுடைய சட்டையில் பதிந்து வாக்குச்சாவடிக்கு வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதிமுக அளித்த புகாரின் பேரில் உதயநிதி பதிலளிக்கத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 7 ஏப் 2021