மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

ஓபிஎஸ் மகன் காரைத் தாக்கியது யார்?

ஓபிஎஸ் மகன் காரைத் தாக்கியது யார்?

அதிமுக எம்.பியான ஓ.பி. ரவீந்திரநாத்தின் காரை தாக்கிய இளைஞர்கள் யார் யார் என்று போலீஸார் அடையாளம் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகத் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம், திமுக வேட்பாளராக தங்கத்தமிழ் செல்வன், அமமுக வேட்பாளராக முத்துசாமி ஆகிய மூன்று முக்கிய வேட்பாளர்களும் கடந்த காலங்களில் ஒன்றாக ஒரே கட்சியில் அரசியல் பணிசெய்தவர்கள்தான். அரசியல் தட்பவெப்ப சூழ்நிலையால் எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள்.

வாக்குப் பதிவு நடைபெற்றுவந்தபோது எம்.பி,யும் துணை முதல்வர் ஒபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் போடி தொகுதியில் உள்ள அனைத்து பூத்களையும் பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளிடம் போலிங் பற்றி விசாரித்து வந்தார்.

மாலை 3.15 மணியளவில் பெருமாள் கவுண்டன்பட்டியில் அமைந்துள்ள பூத்தை பார்வையிடச் சென்றபோது எம்.பி காருக்கு வழிவிடாமல் சில இளைஞர்கள் நின்றிருந்தனர். ஓட்டுநர் ஹாரன் அடித்தபோதும் அவர்கள் கலைவதாக இல்லை. வேண்டுமென்றே மெல்ல மெல்ல ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். காருக்குள் அமர்ந்திருந்த ஓ.பி.ரவீந்திரநாத் வேண்டுமென்றே செய்கிறார்கள் என உணர்ந்து, காரைவிட்டு இறங்கி கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு போலீஸார் எம்பியின் காரை மறித்த இளைஞர்களிடம் குரலுயரத்திப் பேச, திடீரென அந்த நேரத்தில் சிலர் கல்லால் காரைத் தாக்கிவிட்டு ஓடி மறைந்துவிட்டனர்.

இதுகுறித்து ஓபி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசியபோது, “என் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் திமுகவினர் என்றும் அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது”என்று தெரிவித்திருந்தார்.

எம்பியின் காரைத் தாக்கியது யார் என்று போலீசார் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக கருதிய சில சமூகத்தினர் அதை எதிர்த்து தென்மாவட்டத்தில் பிரச்சினை செய்து வந்தனர். இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமோ என்று கருதி இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என்று ஓ.பன்னீர்செல்வமே பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அந்த பாதிக்கப்பட்ட சமூகத்தினரில் சிலர்தான் எம்பி ஓபிஆரின் காரை தாக்கியிருக்கிறார்கள். அவர்களில் 15 நபர்கள் அடையாளம் தெரிந்துள்ளது. போடி தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்கிறார்கள் காவல்துறையினர்.

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 7 ஏப் 2021