மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

தேர்தல் நிறைவு: 71.79 சதவீத வாக்குகள் பதிவு!

தேர்தல் நிறைவு: 71.79 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலின் ஒரே கட்ட வாக்குப்பதிவும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டசபைகளுக்கு நடைபெறும் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது.

5 மாநிலங்களில் மொத்தம் 475 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,53,538 வாக்குப்பதிவு மையங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில், இன்று மாலை 7 மணிவரை 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார். மொத்தம் பதிவான வாக்குகளின் சரியான சதவீதம் நள்ளிரவு 1 மணியளவில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

2016ல் மொத்தமாக 74.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இறுதி பட்டியலின் அடிப்படையில், 2021ல் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலா அல்லது குறைவா என்பது தெரியவரும்.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரம் அனைத்தும் விதிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 6 ஏப் 2021