மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

பிபிஇ உடையில் வந்து வாக்களித்த கனிமொழி

பிபிஇ உடையில் வந்து வாக்களித்த கனிமொழி

இன்று காலை 7 மணி முதல் தமிழகம் முழுதும், 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் உள்ளதால் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மாலை 6 மணி முதல் 7 மணி கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்

இதையொட்டி, சட்டசபைத் தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டன. பிபிஇ உடை அணிந்து தேர்தல் அலுவலர்கள் தயார் நிலையிலிருந்தனர்.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி, மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, பிபிஇ உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். முன்னதாக தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழிக்கு, கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிரச்சாரத்தை ரத்து செய்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தியிருக்கிறார்.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 8,991 நோயாளிகளில் 17 பேர் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 6 ஏப் 2021