மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

5 மணி நிலவரம் : 2016ஐ காட்டிலும் வாக்குப்பதிவு குறைவு!

5 மணி நிலவரம் : 2016ஐ காட்டிலும் வாக்குப்பதிவு குறைவு!

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 6) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குகளும், 11 மணி வரை 26.29 சதவீத வாக்குகளும், மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக நாமக்கல்லில் 59.73 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58 சதவீத வாக்குகளும் பதிவாகின.

2016ல் மதியம் 3 மணி நிலவரப்படி, 63.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2016 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 3 மணி நிலவர வாக்குப்பதிவு 10.35 சதவீதம் குறைவாகும்.

அதுபோன்று, இன்று மாலை 5 மணி நிலவரப்படி, 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் இதுவரை 55.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

2016ல் மாலை 5 மணி நிலவரப்படி, 69.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்படி தற்போது, 5.59 சதவீதம் குறைவாக வாக்குப் பதிவாகியுள்ளது.

வெயில் காரணமாக மக்கள், மாலையில் அதிகளவு வாக்குச்சாவடியில் குவிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 6 ஏப் 2021