மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

பரமக்குடி: 6 கிராம மக்கள் ஓட்டுப்போடாமல் புறக்கணிப்பு!

பரமக்குடி: 6 கிராம மக்கள் ஓட்டுப்போடாமல் புறக்கணிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கமுதக்குடி வழியாக மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே பாதை அமைந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த கேட்டை, கமுதக்குடி, இலந்தைகுளம், பியனேந்தல், ஆதியனேந்தல், சுந்தனேந்தல் உள்ளிட்ட 6 கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். 2019ஆம் ஆண்டு இந்த பகுதியில், நான்கு வழிச்சாலை வந்ததால், அங்கு பாலம் அமைக்கப்பட்டவுடன், எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், ரயில்வே நிர்வாகத்தின் மூலம் கேட் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் ரயில்வே நிர்வாகம் உள்ளது. இதனால் கமுதக்குடி உள்ளிட்ட 6 கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இறந்தவர்கள் உடல்களைக் கொண்டு செல்வதற்கும், பேருந்து நிறுத்தம் செல்வதற்கும் 6 கிலோமீட்டர் தூரம் சென்று பாலத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சப்வே அமைக்கும் வரை தற்காலிகமாக ரயில்வே கேட்டை திறக்க வேண்டும். இல்லையெனில், தேர்தலைப் புறக்கணிப்போம் என 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று பரமக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் ஓட்டுப்போட ஓட்டுச் சாவடிக்கு வராததால் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. கிராம மக்களைச் சமாதானப்படுத்தி ஓட்டுப் போட வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பரமக்குடி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் செல்வி போராட்டம் நடந்து வரும் கமுதக்குடியைச் சேர்ந்தவர். இவர் மட்டும் இன்று காலை வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டார்.

-சக்தி பரமசிவன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 6 ஏப் 2021