மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

1952-2021: தவறாது வாக்களித்த தாத்தா!

1952-2021:  தவறாது வாக்களித்த தாத்தா!

தமிழகம் சந்தித்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தவறாது வாக்களித்த பெருமைக்குரியவர் 105 வயதான மாரப்பன் கவுண்டர்.

தமிழகம் முழுவதும் இன்று இளைஞர்கள் முதற்கொண்டு பழுத்த வயதான முதியவர்கள் வரை ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, முதியோர்கள் தங்களின் முதுமை, இயலாமை உள்ளிட்டவற்றை காரணம் காட்டாமல் எப்படியாவது வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 1952ஆம் ஆண்டு முதல் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர் மாரப்பன் கவுண்டர் இன்று தனது வாக்கைப்பதிவு செய்தார்.

கோவை கருப்பராயன் பாளையத்தில் 1916 ஆம் ஆண்டு ஜீன் 1 ஆம் தேதி பிறந்தார் மாரப்பன் கவுண்டர். இவரது பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அவரது பெற்றோர்கள் ஓலையில் தமிழில் எழுதி வைத்துள்ளனர். அதனடிப்படையில் கிடைத்த விவரங்கள்தான் அது. தற்போது அவருக்கு வயது 105 ஆகிறது.

பரம்பரை பரம்பரையாக இவரது குடும்பம் செய்து வந்த விவசாயத்தையே இவரும் செய்து வந்தார். இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர்.

இந்த வயதிலும் தனது வீட்டிலிருந்து 2000 அடி தூரம் நடந்து வந்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து இவர் கூறுகையில், “ காமராஜர் மற்றும் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளை கண் எதிரே பார்த்தவன். மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்” என கூறினார்.

இவரைப் பற்றி தெரிந்து கொண்ட தேர்தல் பணியாளர்கள், மாரப்பன் கவுண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டனர்.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 6 ஏப் 2021