மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

1 மணி நிலவரம்: 2016, 2021 ஒப்பீடு!

1 மணி நிலவரம்: 2016, 2021 ஒப்பீடு!

தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே ஒரு சில புகார்கள் எழுந்தாலும், தற்போது வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்நிலையில், மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக நெல்லையில் 32.29 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் இதுவரை 37.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தமாக 42.1சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இது இந்த தேர்தலில் 39.61 சதவீதமாக உள்ளது. 2016ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2.49 சதவீதம் குறைவாக உள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குகளும், 11 மணி வரை 26.29 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 6 ஏப் 2021