மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

11 மணி நிலவரம் : 2016ஐ விட வாக்குப்பதிவு அதிகரிப்பு!

11 மணி நிலவரம் : 2016ஐ விட வாக்குப்பதிவு அதிகரிப்பு!

இன்று தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் 3ஆவது கட்ட தேர்தலும், அசாமில் 3ஆவது இறுதிக்கட்ட தேர்தலும் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில், 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3ஆம் பாலினத்தவர் 7192 பேர் உள்ளனர். இவர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாகவும், ஒரு சிலவற்றில் கூட்டம் குறைவாகவும் காணப்படுகிறது.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 13.80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இது 2016ல் 9 மணி நிலவரப்படி, 18.3 சதவிகிதமாக இருந்தது. 9 மணி நிலவரப்படி, 2016ஐ காட்டிலும், 2021ல் 4.5 சதவிகிதம் குறைவாகவே இருந்தது.

இதையடுத்து, இன்று காலை 11 மணி நிலவரப்படி, 26.29 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 28.33% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்த பட்சமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 20.98% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 23.67% வாக்குகள் பதிவாகியுள்ளன

2016ல் 11 நிலவரப்படி 25.2 சதவிகிதமாக இருந்தது. 2016 தேர்தலைக் காட்டிலும் 2021ல் 1.09 சதவிகித வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

செவ்வாய் 6 ஏப் 2021