மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

அரைக்கால்சட்டை போலீஸ் முதல் அதிரடி போலீஸ்படை வரை...தேர்தல் திக்..திக்!

அரைக்கால்சட்டை போலீஸ் முதல்  அதிரடி போலீஸ்படை வரை...தேர்தல் திக்..திக்!

படம் பார்த்து கதைசொல்வதைப் போல ஆகிவிட்டது, இன்றைய நாட்டு நிலவரம். மேலே உள்ள படம், நீங்கள் ஊகிக்கக் கூடியபடி ஒரு வாக்குச்சாவடியின் காட்சிதான்..!

இணையத்தில் பரவலாக அறியப்பட்ட இந்தப் படம், 1967ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது எடுக்கப்பட்டது. படத்தைப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றக்கூடும். ஆனாலும் பலருக்கும் ஏற்படும் பொதுவான ஓர் எண்ணம், கருப்பு வெள்ளைப் படம் போல அந்தக் காலமும் வாக்களிப்பு நாள் எவ்வளவு அமைதியாக இருக்கிறது. அந்த மனிதர்களின் பாவனையும் உடல்மொழியும் எத்தனை கதைகளைச் சொல்கின்றன!

தோராயமாக வாக்குச்சாவடிக்கு ஓரிருவர் என்கிற அளவில்தான் பாதுகாப்புக்கு போலீஸ்காரர்கள் இருப்பார்கள். 80-கள்வரை பெரும்பாலான இடங்களில் இந்த நிலைமையைச் சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிந்தது. அரசியல் கட்சிகளின் பெருக்கமும் கட்சிகளுக்கு உள்ளேயே மோதலும் சாதலும் அதிகரிக்க, தேர்தல் பாதுகாப்பு என்பது பெரும் தலைவலியாக மாறியது.

ஒரு தேர்தலில் ஏற்படும் மோதல்களில் தற்காலிகமாகச் சமாதானம் ஆனாலும், அடுத்த தேர்தல்வரை காத்திருந்து பதிலடி தருவது இன்றுவரை தொடர்கின்ற ஒரு கவலைக்குரிய விசயமாகவே இருக்கிறது. வடமாநிலங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் தென்மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் சமூகப் பதற்றமும் இத்தோடு சேர்ந்துகொண்டது.

அந்தக் கட்சி, இந்தக் கட்சி என அரசியல் போட்டியால் நிகழ்ந்த சண்டைகள், சாதி, மதப்படியான அமைப்புகள், கட்சிகளின் பெருக்கத்தால் இன்னும் மோசமாகவே மாறியது, தேர்தல் காலகட்ட சட்டம் ஒழுங்கு. இதன் அளவு அதிகரிக்க அதிகரிக்கப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்னின்ன வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என முன்கூட்டியே மதிப்பிட்டு, பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 சாவடிகள் மிகப் பதற்றமானவை என்றும் 10,528 சாவடிகள் பதற்றமானவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தலைநகர் சென்னையில் மட்டும் 16, 123 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இவ்வளவு சாவடிகள் இருந்ததில்லை. கடந்த தேர்தலில் 3,254 சாவடிகள்தான் இருந்தன. கொரோனா காரணமாக, ஆயிரம் வாக்காளர்களுக்கு மேற்பட்ட சாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் தேர்தல் பாதுகாப்புக்காக 1, 05, 372 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்காவல் படை, தீயணைப்பு-மீட்புத் துறை, சிறைக்காவலர்கள் ஆகியோர் அடங்கிய 34, 130 பேரும், ஆயுதப்படைக் காவலர்கள் 74, 162 பேரும், சிறப்புக்காவல் படையினர் 8,010 பேரும், துணை ராணுவத்தினர் 23, 200 பேரும், இவர்களைத் தவிர, வெளிமாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினர் 6,350 பேரும் ஊர்க்காவல் படையினர் 12, 411 பேரும் வரவழைக்கப்பட்டு தேர்தல் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எந்திரங்களை மூடிமுத்திரையிட்டுப் பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்குள் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மனதில் திக்திக்தான்!

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 6 ஏப் 2021