மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

வாக்குப்பதிவு தொடங்கியது!

வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், கமல்ஹாசன், சீமான் என ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனர். முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் தேர்தல் இது.

எனவே, எந்தக் கூட்டணி வெற்றி பெறும்... யார் முதல்வராக வருவார் என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். முதன்முறை வாக்காளர்களும் ஆர்வத்துடன் சென்றுகொண்டிருக்கின்றனர்.

முன்னதாக, வாக்களிக்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்தது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28,69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர்; பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர்; 7,192 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 1,59,165 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் தலா 91,180 எண்ணிக்கையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலா 2 சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

46,203 வாக்குச்சாவடிகளில் மட்டும் வெப் காஸ்டிங் முறையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300 கம்பெனிகளைச் சேர்ந்த 23,200 துணை ராணுவப் படையினர் தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர 1.58 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 88,937 வாக்குச்சாவடிகளில், 4,17,521 தேர்தல் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

கொரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்கு மேல் பிபிஇ கிட் உடை அணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 6 ஏப் 2021