மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

மூன்று துப்பாக்கிகளும் 377 ரூபாயும்!

மூன்று துப்பாக்கிகளும் 377 ரூபாயும்!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து,தொடர்ச்சியாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

பொதுவாக ஐடி ரெய்டு என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். ஆனால், ரெய்டு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரன் தனது முகநூலில் பதிவிட்ட தகவல்கள் சுவாரஸ்யமாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராமச்சந்திரனுக்கு, தொகுதி பொறுப்பாளராக அக்கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் சி.மகேந்திரன் செயல்பட்டு வருகிறார்.

அவர் தங்கியிருந்த அறையைத் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரோடு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் தமது அறையில் சோதனை நடத்தியது குறித்தும் இந்த சோதனையில் இருந்து கையிருப்பு ரூ.377 பாதுகாப்பாக இருந்தது குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரன் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஏப்ரல் 4 அன்று அதிகாலை சரியாக 1.00 மணி. தேர்தல் பணிக்காக தேன்கனிக்கோட்டை 'சிட்டி' வாடகை விடுதியில், ஒரு நபர் தங்கிக்கொள்ளும் அறையில் இருந்தேன்.

கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தேன்.

வாசலில் நவீன துப்பாக்கி ஏந்திய மூன்று ராணுவ வீரர்கள். ஐந்து பேர் கொண்ட வருமான வரி அதிரடி குழு.

'என்ன வேண்டும்?' என்று கேட்டேன்.

சோதனை' என்றார்கள்.

'செய்து கொள்ளுங்கள்' என்றேன்.

அறையில் சோதனை செய்துகொண்டே இருந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

மாலைதான், கர்நாடக மாநிலத்தின் பாஜக அமைச்சர்கள் மூலம் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் முயற்சிகள் தளி தொகுதியில் நடைபெறுகிறது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னேன். அன்று இரவே என் அறையில் சோதனை நடக்கிறது என்றால் இதைப் பார்த்து, எனக்குள் சிரித்துக் கொள்வதைத் தவிர நான் வேறு என்ன முடியும்?

வருமான வரித்துறை அதிகாரி பீகாரைச் சேர்ந்தவர். அவரும் அவரது குழுவினரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.அவர்கள் சென்ற உடன் என்னிடமிருந்த பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்தேன்.

மொத்தம் 377 ரூபாய் இருந்தது.

இவ்வாறு சி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

-இராமானுஜம்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 6 ஏப் 2021