மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

புதுவை ரங்கசாமியை எதிர்க்கும் சுயேச்சை வேட்பாளர் மாயம்!

புதுவை ரங்கசாமியை எதிர்க்கும் சுயேச்சை வேட்பாளர் மாயம்!

ரங்கசாமியை எதிர்த்து ஏனாம் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திடீரென்று மாயமாகிவிட்டதாக அவர் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்துடன் புதுவை சட்டசபைக்கும் நாளை (ஏப்ரல் 6) தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுவையில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து துர்கா பிரசாத் பொம்மடி உள்ளிட்ட 14 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மடி திடீரென மாயமாகி விட்டார். இது தொடர்பாக அவர் மனைவி ஏனாம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லை எனக் கூறி உள்ளார்.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாளை (ஏப்ரல் 6) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாயமாகி இருப்பது ஏனாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

திங்கள் 5 ஏப் 2021