மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

சசிகலா ஓட்டு போட முடியுமா?

சசிகலா ஓட்டு போட முடியுமா?

வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லாத நிலையில், நாளை நடைபெறும் தேர்தலில் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது தி நகர் இல்லத்தில் வசித்து வரும் அவர் நெல்லை, தஞ்சை காஞ்சிபுரம் என ஆன்மிக தலங்களுக்குச் சென்று வந்தார்.

சிறைக்குச் செல்வதற்கு முன், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் இல்லத்தில் வசித்து வந்தார். இதனால் அந்த முகவரியில் சசிகலாவுக்கு வாக்குரிமை இருந்து வந்தது. அதன்படி, ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்களித்து வந்தார்.

தற்போது, போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலிலிருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளது. தி.நகர் இல்லத்தில் உள்ள முகவரியில் வசித்து வரும் சசிகலா அந்த முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க விண்ணப்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதுதொடர்பாக, அமமுக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் கூறுகையில், “சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டது குறித்து வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மூலமாகத் தேர்தல் ஆணையத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே புகார் தெரிவிக்கப்பட்டும் அவரது பெயரை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்ட போதே, சசிகலாவிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பெயர் நீக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலையீடும் இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாத நிலையில், அவருக்கு வாக்குச் சீட்டு முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். சசிகலாவின் பெயர் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அரசியலிலிருந்து விலகிய சசிகலாவால், இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது அமமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

திங்கள் 5 ஏப் 2021