மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், கட்சியின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. ஏற்கனவே கே.என் நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் காவலர்களின் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக, பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது, திமுக வேட்பாளர் கே.என்.நேருவைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் வி பத்மநாபன் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, 'இவையெல்லாம் நேருவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது' என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் முசிறி தொகுதியில் பிரச்சாரத்திற்குச் சென்ற கே.என்.நேரு கட்சியினரிடம் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா தொடர்பாக அவர் பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முசிறி காவல்நிலையத்தில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 5 ஏப் 2021