மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

விரக்தியில் விஜயகாந்த் வேட்பாளர்கள்!

விரக்தியில் விஜயகாந்த் வேட்பாளர்கள்!

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளில், 21 தனி தொகுதிகள். கட்சியின் பொருளாளர் பிரேமலதாவுடன், 6 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த கூட்டணியில், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கரன்சி மழை கரைபுரளும் என்ற நம்பிக்கையில் தேமுதிக வேட்பாளர்கள் சொந்த பணத்தை போட்டு முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.

தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் அமமுக நிர்வாகிகள் செலவுக்கு பணம் கொடுத்தால்தான் பிரச்சாரத்திற்கு வருவோம் என கூறியதால் பலதொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்க முடியாமல் வேட்பாளர்கள் விரக்தியில் தலைமையிடம் முறையிட்டனர். அமமுக தலைமையில் இருந்து தங்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய பின்னரே இந்த நிலைமை மாறியது.

இந்த சூழலில், தலைமை நிதி உதவி செய்யும் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருந்த தேமுதிக வேட்பாளர்களுக்கு கடந்த 2ஆம் தேதி தலைமை கழகத்திலிருந்து வங்கிகணக்கு விபரம் அனுப்புமாறு தகவல் வந்தவுடன் ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் அதிர்ச்சி ஏற்பட்டது.

தொகுதிக்கு கோடி ரூபாய் தேமுதிக வழங்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வந்த நிலையில், 3 நாட்களில் பணத்தை எப்படி விநியோகம் செய்வது என விவாதமும் நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை(4.04.2021) தேமுதிக வேட்பாளர்கள் வங்கி கணக்கிற்கு தலைமை கழகத்திலிருந்து 3 லட்ச ரூபாய் பணம் வந்துள்ள தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

-இராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

திங்கள் 5 ஏப் 2021