மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

பச்சை துரோகம்: நடிகர் விஜய்சேதுபதி

பச்சை துரோகம்: நடிகர் விஜய்சேதுபதி

நாளை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகன் என்பதை கடந்து கதாபாத்திரங்களுக்காக ஈகோ பார்க்காமல் நடித்து தன்னை தனித்துவமாக இந்திய திரையுலகில் நிலைநிறுத்திக்கொண்டவர் நடிகர் விஜய்சேதுபதி.

நாளை காலை நடிகர்கள், இயக்குனர்கள் எந்தெந்த வாக்கு சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர் என்பதை அவர்களின் பத்திரிகை தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகர் விஜய்சேதுபதி வீடியோ வடிவில் தமிழக மக்களுக்கு வாக்களிக்க வேண்டியது கடமை என்பதை வேண்டுகோளாக வைத்திருக்கும் பதிவு ஒன்றை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டிருக்கிறார்

அந்த வீடியோவில் விஜய்சேதுபதி,

அன்பார்ந்த வாக்காளர்களே நாம் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் வந்துருச்சு வழக்கமா தேர்தல் நேரத்தில யார் வந்தா நமக்கென்னா, இல்லை காசு கொடுக்கிறவங்களுக்கு ஓட்டுபோடுவோம், இல்லை ஓட்டுபோட்டு ஒண்ணும் ஆகப்போறதில்ல என்கிற மனநிலையை ஓரமா தூக்கி வச்சுட்டு நமக்காக இல்லை நம்ம குழந்தைக்களுக்காக, எதிர்கால சந்ததிக்காக நிச்சயமா ஓட்டு போடுங்க காசு வாங்கிட்டு ஓட்டுபோடுவது, காசுக்காக வாக்கை விற்பதை எப்படி துரோகமோ அதை விட வாக்களிக்காமல் இருப்பது பச்சை துரோகம் உங்களுக்கு பிடித்தவர்களோ, பிடிக்காதவர்களோ என்பதை காட்டிலும் அவர்களுக்கு வாக்களிப்பதால் நாட்டுக்குஎன்ன நன்மை என்பதை அறிந்து வாக்களியுங்கள் என பேசியுள்ளார்.

-இராமானுஜம்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 5 ஏப் 2021